கன்னியாகுமரி மே 10
குமரி மாவட்டம் குளச்சல் நகர குமரி டிரஸ்ட் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி 17-ஆம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் அன்வர்சாதத் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர் மன்ற தலைவர் அ.நசீர், குளச்சல் நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், மேனேஜர் ஜெயன் பெல்லார் மின் பொறியாளர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் தர்ப்பூசணி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் குமரி ட்ரஸ்ட் நகர தலைவர் அபுதாகிர், செயலாளர் பாபு உசேன், பொருளாளர் அஷ்ரப் மற்றும் செயற்குழு உறுப்பினர் மாகின், அல் அமீன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஷபிக், இஸ்மாயில், ரியால், அமீர் அல்தான், முஜிபு, ஆட்டோ சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.