நாகர்கோவில் மே 6
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் ஆயுர்வேத,யுனானி,கோமியோபதி உள்பட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது, இந்த தேர்வை தேசிய தேர்வு மையம் நடத்தியது,நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர், தமிழகத்தில் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் எழுதியுள்ளார் அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 5196 மாணவ மாணவிகள் 7 மையங்களில் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 4980 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் 216 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை சராசரியாக 95.84 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் நாகர்கோவில் ஒழுகனசேரி ராஜா இன்டர்நேஷனல் பள்ளியில் எழுதிய சில மாணவ மாணவர்கள் கூறுகையில்” நாங்கள் நினைத்த அளவுக்கு தேர்வு கடினமாக இல்லை சுலபமாக இருந்தது நிச்சயம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தனர் ஒரு சில பாடங்கள் கடினமாக இருந்தாலும் நாங்கள் முப்பது நாட்களுக்கு முன்பாக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று இருந்தது எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என செய்தியார்களிடம் தெரிவித்தனர்.