தஞ்சாவூர் ஜூலை 10
திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் தாலுகா நார்த்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகன் அரவிந்த் (வயது 25 )இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின் பேரில் வல்லம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் வழக்கு ஆவணங் களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவண ங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து, அரவிந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித் தார். அதன்படி அரவிந்த் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.