வேலூர்_15
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிறுசு திருவிழா வைகாசி ஒன்றாம் தேதி காலை வெகு விமர்ச்சியாக கங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
சிறுசுத் திருவிழா வைகாசி 1ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மேளதாளங்கள் தாரைதப்பட்டை முழங்க அம்மனுக்கு சீர்வரிசை வரிசையுடன் அம்மன் சிலை எடுத்து வரப்பட்டது. அம்மனின் தாய் வீடான முத்தியாலம்மன் ஆலயத்திலிருந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டடு சிறுசு ஊர்வலம் புறப்பட்டது.
தரணம்பேட்டை நீலி கோவிந்தப்பு செட்டி தெரு, காந்தி ரோடு ஜவகர்லால் தெரு கோபாலபுரம் வழியாக அம்மன் சிறுசு பல்லாயிர கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்து காலை 9 மணியளவில் ஆலயத்திற்கு வந்தடைந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிறுசு ஊர்வலம் வரும் வீதிகளில் சாலைகளிலும் மாடி வீடுகளிலும் மக்கள் மக்கள் வெள்ளத்தில் அம்மன் சிலை மிதந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. சிறுசு மீது பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்கள் பூக்கள் பூமாலைகளை தூவி மக்கள் நேர்த்திக்கடன் சிறிது வழிபடுவது வழக்கம் என்பது இப்பகுதி பக்தர்களின் வரலாறு குறிப்பிட்டுள்ளது.
அம்மன் ஊர்வலத்தின் போது பக்தர்கள் அம்மன் வேடத்திலும் புலிவேடம், கம்பு, சிலம்பாட்டம் போன்றவைகளுடன் அம்மனை உற்சாகமாக அழைத்து வருவார்கள், இத்திருவிழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் சித்ராதேவி மற்றும் பொதுமக்கள் என பக்தர்களுடன் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரில் ஆங்காங்கே காலை உணவுகள் அசைவ உணவுகள் நீர்மோர் போன்ற குளிர்பானங்களை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 14ம் தேதி செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் வான வேடிக்கைகளுடன் சிறப்பாக இத்திருவிழாவை கொண்டாடினர். இத் திருவிழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இன்னொரு க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.