கிருஷ்ணகிரி,மே.6-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய மாணவர்கள் 8732. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7801. தேர்வு எழுதிய மொத்த மாணவிகள் 10142. தேர்ச்சி பெற்ற மாணவிகள் 9538.
தேர்வு எழுதிய 18,874 மாணவ மாணவியர்களில் 17,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் தேர்ச்சி விகிதம் 91.87 ஆகும். ( கடந்தாண்டு 89 சதவீதமாக இருந்தது ) கடந்தாண்டு தமிழகத்தில் 37-வது இடமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் இந்த முறை 34 ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது: இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வி சதவீதத்தில் உயர்ந்துள்ளது. பெற்றோர்கள் புதியதாக சேர்க்கும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு விட தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதால் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து மாநில அளவில் முதல் 10 இடத்திற்குள் வருவதற்கு முயற்சி செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அப்போது கேட்டுக்கொண்டார்.