கிருஷ்ணகிரி மே 13:
கிருஷ்ணகிரியில் பிரதிக்ஷாலயா நாட்டியப் பள்ளியின் சார்பில் ஒரு வருடம் பயிற்சி முடித்த நாட்டியப்பள்ளி பள்ளி மாணவிகளின் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நடைப்பெற்றது. கலைவாளர் அகில கண்ணதாசன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரசு மகளீர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், வரலாற்று ஆய்வாளர் நாயணமூர்த்தி, அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் திரிவேணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பயிற்சி முடிந்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சலங்கை பூஜை மற்றும் மாணவிகளின் நாட்டியாலயா அரங்கேற்றத்தினை துவக்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டிய மாணவிகளின் கண்கவரும் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. இந்த அரங்கேற்ற பரத நாட்டியத்தினை ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு மாணவிகளின் பரதநாட்டியத்தினை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.