கிருஷ்ணகிரி, மே. 12-
கிருஷ்ணகிரியில் முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட கோடை கால பயிற்சி நிறைவு விழா.பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மாணவர்களை வாழ்த்தி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட கோடைகால பயிற்சி நிறைவு விழாவிற்கு கிருஷ்ணகிரி கால்பந்தாட்ட குழு தலைவர் வழக்கறிஞர் மதியழகன் தலைமை வகித்தார், இணை செயலாளர் சிவகுமார் வரவேற்புரையாற்றினார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் நவாப் மற்றும் அரிமா சங்கத் தலைவர் வெங்கடேசன், தொண்டு நிறுவன தலைவர் ராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஜி.என்.ஆர் பில்டர்ஸ் ராமநாதன், கிரானைட் தொழிலதிபர் சண்முகம் எஸ் பி எண்டர்பிரைசஸ் பிரபாகரன் விழா குழு செயலாளர் கே.கோபால் துணைச் செயலாளர் ஜெய்பிரகாஷ் வி.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் விழா நிறைவில் கிருஷ்ணகிரி கால் பந்தாட்ட குழு பொருளாளர் சரவணன் நன்றி உரையாற்றினார்.