கிருஷ்ணகிரி,மே.15
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை
திருத்தலத்தில், புதியதாக அமைக்கப்பட்ட புனித பாத்திமா அன்னையில் அற்புத
கெபி மற்றும் திருத்தல நுழைவு வாயில் திறப்பு விழா, வெகு விமரிசையாக
நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் மேற்கு மணடல போர்ச்சுக்கல் ஆக மாறிவரும், கிருஷ்ணகிரி
புனித பாத்திமா அன்னை திருத்தலத்தில், புதியதாக மரியன்னையின் அற்புத
கெபி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருத்தலத்திற்கு புதியதாக நுழைவு
வாயிலும், அதையொட்டி அழகான சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.ஸநுழைவு வாயிலின் திறப்பு விழா மற்றும் அற்புத கெபியின் மந்தரிப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில், தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு. முனைவர். லாரன்ஸ் பயஸ் அடிகளார்
கலந்துக்கொண்டு, நுழைவு வாயிலை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற
சிறப்பு திருப்பலி பூஜையில், புனித பாத்திமா அன்னையில் அற்புத கெபியை,
மந்தரித்து பக்தர்களுக்காக அற்பணித்தார். இதனைத்தொடர்ந்து, புனித பாத்திமா அன்னையில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி, திருத்தல வளாகத்தை சுற்றி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க
கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டு, வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை இசையாஸ் சாந்தப்பன் மற்றும் பங்கு பேரவையினர், அன்பியங்கள், பக்த சபையோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.