கரூர் மாவட்டம் – மே 13
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதி லாரட்ஸ் பார்க் மேல்நிலைய பள்ளியில் கிச்சாஸ் சிலம்பம் அகாடமி சார்பில் சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா. கிச்சாஸ் சிலம்பம் அகாடமி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீரமணி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்ட சிலம்பாட்டம் கழகம் தலைவர் மலையப்ப சாமி, நல்லாசிரியர் விருது பெற்ற கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சி கழகம் தலைவர் வீர திருப்பதி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி K.P.தாளப்பட்டி தலைமை ஆசிரியர் தங்கம் விஜயபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசகி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மாணவ மாணவிகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் உடலை ஆரோக்கியமான வைத்துக் கொள்வதற்குமான பாரம்பரியமான கலைகளான சிலம்பாட்டத்தில் தனது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள் மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டம் வழங்கி சான்றிதழ் கௌரிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி அரசு பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்புத்தினர்