திருவண்ணாமலை, மே 15 போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் & ஒழுங்குத் துறை ஆகியவை அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன்கிளாஸ்களைப் பெற்றன.
இந்த கோடையில் தொடர்ச்சியான சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவமனையானது சன்கிளாஸ்களை வழங்கியது.
திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஐபிஎஸ் மருத்துவமனை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிப் பேசுகையில் உள்ளூர் அதிகாரிகளை ஆதரிப்பதில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டைக் காணும் போது இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு ஃபேஷன் என்பதைத் தவிர சிறந்த சன்கிளாஸ்களைத் தேர்ந்தெடுப்பதால் அவை கடுமையான சூரியக் கதிர்களில் இருந்து நமது கண்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகிறது. நமது போக்குவரத்து காவல்துறையினருக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு படி மேலே சென்று டாக்டர் அகர்வால் மேற்கொண்ட இந்த கவனிக்கத்தக்க நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்