திருப்பத்தூர்:மே:03,
நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன் வயது 42 இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் மண்ணெண்ணெய் திரிகொண்ட குண்டை சரவணன் வீட்டின் போர்டிகோ, கழிவறை, படிகட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீசி சென்றுள்ளனர். இதன் காரணமாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் விசாரணையில் சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அஸ்வின் (21) என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது இதனை கார் ஓட்டுநர் சரவணன் அஸ்வின் தந்தை கதிர்வேலிடம் கூறியதால் ஆத்திரத்தில் தனது நண்பர்களான அபிஷேக்(18), ரவி(19), ராகுல்(21),ஆரிஷ்(18),கேசவராஜ்(28), ஆகாஷ்(24) மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்டோருடன் மண்ணெண்ணெய் குண்டு வீசிதாக ஒப்புக்கொண்டனர் பின்னர் போலீசார் 8 வாலிபர்களையும் கைது செய்தனர் பின்னர் 18 வயதுக்கு மேல் உள்ள வாலிபர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயதுடைய சிறுவனை சென்னை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட 8பேர் கைது
Leave a comment