நாகர்கோவில் – நவ- 05,
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களின் அத்துமீறலை செல்போனில் பதிவு செய்த கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம். ஜீ. ஆர் நகர் ஆதிதிராவிட மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட கண்கானிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்கள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் , ஆரல்வாய்மொழி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட எம்.ஜீ.ஆர். ஆதிதிராவிடர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். கடந்த 01.11. 2024 , அன்று இரவு 8.40 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கு இடையே வாய்தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்து ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், கண்டால் தெரியும் காவலர் ஒருவரும் சீருடையில் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்க்கு சென்றுள்ளனர். சீருடை அணியாமல் காவலர் செந்தில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்துள்ள நிலையில் அப்பகுதியை சார்ந்த மதன் குமார் (24) என்பவரை வலுக்கட்டாயமாக காவலர் செந்தில் சட்டையை பிடித்து இழுத்து கையில் இருந்த இரும்பு பைப்பால் இடது மற்றும் வலது கையில் அடித்துள்ளார். அவரது ஆள் காட்டி விரல் சேதம் அடைந்தது உள்ளதாகவும் , காவல் துறையின் கொலைவெறி தாக்குதலை நேரில் பார்த்து கொண்டுருந்த மதன்குமாரின் சகோதரியும், கல்லூரி மாணவியுமான சுவேதா (21) என்பவர் அதனை தனது செல்போனில் பதிவு செய்ய முயன்ற போது ஆரல்வாய் மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் செல்போனை பறிக்க முயன்றுள்ளார் . மாணவி கொடுக்க மறுத்த நிலையில் அவரை பின்பக்கமாக நின்று கட்டி அனைத்த படி அவரது ஜாதியை கூறி அசிங்கமான வார்த்தையினால் பேசி வலது கையால் மாணவி சுவேதாவின் இடது கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார் . காவலர் செந்தில் மாணவியை கட்டி பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. இச் செயலை நேரில் பார்த்த அவர்களது உறவினரான மஞ்சு (22) என்பவரையும் தனது கையில் வைத்திருந்த கம்பால் தாக்கி அவதூறு வார்த்தைகளால் ஜாதியை கூறி இழிவு படுத்தியுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்களும் அவர்களது உறவினரான ராபின்குமார் மூலம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர் .ஆரல்வாய்மொழி காவல்துறையின் இச்செயல் வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவதாக உள்ளது பாதிக்கப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்யக்கோரியும் மனித உரிமை மீறலுடன் கொடூரமான முறையில் மதன் குமார், சுவேதா, மஞ்சு ,ஆகியோர்களை பைப்பால் தாக்கியும் ஜாதி பெயரைச் சொல்லி இழிவு படுத்தியும் தகாத வார்த்தைகளால் பேசி தனது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்திய உதவி ஆய்வாளர் மகேந்திரன் காவலர் செந்தில் மற்றும் சீருடைகள் இருந்த காவலர் மீதும் துறை ரீதியான முறையில் நடவடிக்கை எடுக்க கோரியும் இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்யும் படியும் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.