கன்னியாகுமரி, மே. 12-
அஞ்சுகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள். பி.டி. செல்வகுமார் வழங்கினார்.
அஞ்சுகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சிறந்த மக்ககள் சேவைகள் செய்து வரும் ஆசிரியர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை அழைத்து கௌரவப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அஞ்சுகிராமத்தில் சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிர். தொடர்ந்து
சமுதாயத்தில் மக்கள் பணி செய்து வரும் அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் காமாட்சி ஆட்டோ டிரைவரும் சமூகசேவகருமான சொர்ணப்பன் உட்பட பலருக்கு
சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தினார். விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஜாண்கென்னடி, பாலகிருஷ்ணன், ரகுபதி, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.