ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், ஏஐசிடிஇ, மற்றும் மத்திய கல்வி அமைச்சகம், புது தில்லி சார்பில் ஐந்து நாட்கள் “புதுமை, வடிவமைப்பு, மற்றும் தொழில்முனைவு – முகாம் (கட்டம் III), உயர்கல்வி மாணவர்களுக்காக ஐந்து நாள் நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன், வாழ்த்துரை வழங்கினர். தலைமை விருந்தினர் ஷெரின் சாம் ஜோஸ், ஸ்டார்ட்அப் வேலி, சிஇஓ, அமல் ஜோதி பொறியியல் கல்லூரி, கேரளா, மற்றும் சௌரப் ஆர்.நிர்மலே, ஆலோசகர், மத்திய கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு பிரிவு, .ஆர்.சுஜாதா மற்றும் நவேத் அகமது, மாஸ்டர் டிரெய்னர். வாத்வானி அறக்கட்டளை, ஆகியோர் உரையாற்றினார். 2500 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
கடைசி நாளில் சுமார் 40 மாணவர் குழுக்கள் 12 நிபுணர்கள் குழு முன்னிலையில் தங்கள் புதுமையான யோசனைகளை விவரித்தனர். அதில், பள்ளி, கல்லூரி பிரிவுகளில் சிறந்த புதுமையான யோசனைகள் தேர்வு செய்யப்பட்டன. பல்கலை சுயதொழில் மைய துணை இயக்குநர் ஜே. டெனி, நன்றி கூறினார்.
கலசலிங்கம் பல்கலையில் , “புதுமை, வடிவமைப்பு, மற்றும் தொழில் முனைவு” -முகாம் நிறைவு விழா!
Leave a comment