கன்னியாகுமரி மே 04,
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கால் கோள் நடும் விழா குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கோயில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன், திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளர் தாமரைபாரதி, பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ராஜா, கன்னியாகுமரி பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ்மைக்கேல் உட்பட கழக நிர்வாகிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.