மார்ச்:4 மாநகராட்சி சாலைகள்
குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படுவதாக 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கட்டு அணிந்து சக்கர நாற்காலியில் உள்ளே வந்ததால் பரபரப்பு.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை வசதி சரியில்லை விபத்து ஏற்படுகிறது. பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லி வெளியே வர முடியவில்லை.
என 30 வார்டு உறுப்பினர் புஷ்பலதாதங்கவேல் தலை , கை, கால் களில் கட்டு போட்டு சக்கர நாற்காலியில் மாமன்ற கூட்டத்திற்கு உள்ளே வந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மேயர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என முதலில் தெரிவித்தார். எதிர்ப்பு தெரிவிக்க வெறும் கட்டு என தெரிந்த உடன் மேயர் தினேஷ்குமார் ஆத்திரமடைந்து நாடகம் நடத்தும் உறுப்பினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. இதை அடுத்து இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து விதிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி கோரி திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.