தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பாக மூன்று3 வதுஆண்டு மாபெரும் சின்ன மாடு வண்டி, பூஞ் சீட்டு மாடு வண்டி எல்லகை பந்தயம் நடைபெற்றது.
இதில் 16 சின்ன மாட்டு வண்டிகளும், 29 பூஞ்சீட்டு மாட்டு வண்டி கலந்து கொண்டன. போட்டிகளை விளாத்திகுளம் சட்டமன்றத் உறுப்பினர் G.V.மார்க்கண்டேயன் கொடியசைத்து மாட்டுவண்டி போட்டியை துவக்கி வைத்தார்.
ராஜ் எஸ்பி கண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போட்டியின் முதல் பரிசு 25001 ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைச்சேர்மன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் வழங்கினார். இரண்டாவது பரிசாக 18001 மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை முருகராஜ், ஊர் தர்மகத்தா பாலமுருகன், துணை நாட்டாமை லட்சுமணன் மற்றும் தொழிலதிபர் எஸ் பி கண்ணன், வார்டு உறுப்பினர் கற்பகவல்லி பச்சை ராஜ் ,அகிலன் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்ந்த வர்கள் ரேக்லா ரேஸ் ரசிகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சீறி பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.