திண்டுக்கல் மே :02
ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து துணைத் தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி செயலாளர் முத்துக்குமார்,வனச்சரக அலுவலர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஒய்நியூ அறக்கட்டளை சார்பாக தலைவர் ஹென்றி சகாயராஜ்,செயலாளர் ரம்லா ஹமீது, அறக்கட்டளை உறுப்பினர் அந்தோஸ்கின்னர், சிறுமலை வனக்குழு தலைவர் லட்சுமணன், பொன்னுருவி வனக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், மாலை நேர பயிற்சி மைய ஆசிரியை பஞ்சு, பொன்னுருவி,கருப்பு கோயில், அகஸ்தியர் புரம் பொதுமக்கள் மற்றும் மாலை நேர பயிற்சி மைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ, மாணவிகள், ஊர்பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். வெயில் காலத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் விதமாக சிறுமலைக்கு செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நிறுவனத்தின் சார்பாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Leave a comment