ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவர் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார். தற்போது கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒகேனக்கல், ஆலம்பாடி, மணல் திட்டு, ஐவர் பானி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து பரிசல் ஓட்டிகளிடம் இந்த நீர்வரத்து எப்பொழுதெல்லாம் குறைகிறது என ஜி கே மணி கேட்டறிந்தார். இதற்கு 10 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நீர்வரத்து முற்றிலுமாக குறைவதாகவும், தற்போது குறைந்து 200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது எனவும், இந்த நீர்வரத்து மேலும் அடுத்து வரும் வாரங்களில் படிப்படியாக குறையும் என்றனர். மேலும் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும் என பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர். எம்எல்ஏ ஜி கே மணி இது குறித்து சட்டமன்றத்தில் பேசி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை வாரியத்திடம் அழுத்தம் கொடுத்து மாதாமாதம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய டி எம் சி தண்ணீர் கர்நாடகாவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துவேன்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவர் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்

Leave a comment