கன்னியாகுமரி மே 7
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏ ஜே எம் பவுண்டேசன் சார்பாக “மரங்களை நடுவோம், காடுகளை உருவாக்குவோம்” திட்டத்தின்படி மாதந்தோறும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த மே மாதத்திற்கான மரக்கன்றுகள் நடும் நிகழ்வு லெமூரியா தற்காப்புக்கலைக்கூடத்தின் தாய்க்களம் இடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏ ஜே எம் பவுண்டேஷன் சார்பாக தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆலமரம், வேம்பு, நாவல்மரம், நெல்லிமரம், பலா மரம் உட்பட 50 மரக்கன்றுகளை நடவு செய்து தண்ணீர் ஊற்றி பராமரித்தனர். முடிவில் நாட்டு மரங்களின் பயன் குறித்தும் மரங்களின் தேவைகளும் குறித்தும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க அனைவரையும் ஊக்கப்படுத்துவதை இலக்காக ஏ ஜே எம் பவுண்டேசன் தன்னார்வல அமைப்பு கொண்டுள்ளது.