ராமநாதபுரம், மே 8-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு 850 ஆண்டு திருவிழா மே 9ல் தொடங்குகிறது. மே 19 ல் கொடியேற்றம், மே 31 மாலை சந்தனக்கூடு ஊர்வலம் , ஜூன் 1 அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி ஏர்வாடி அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். கடந்த காலங்களை போல் எவ்வித அசம்பாவிதம் இன்றி சந்தனக்கூடு திருவிழாவை அமைதியான முறையில் நடத்த அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், துணை வட்டாட்சியர் பரமசிவம், கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் கலாராணி, ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை தலைவர் சாதிக் பாட்சா,தர்ஹா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம், அஹமது இபுராஹீம், அம்ஜத் உசேன் ஹாஜி உசேன், செய்யது சுல்தான் இபுராஹீம், சோட்டை செய்யது பாதுஷா, சோட்டை செய்யது இப்ராஹிம் உள்பட பலர் பங்கேற்றனர்.