ராமநாதபுரம், மே 8
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள ஓட்டல்கள், திறந்த வெளி உணவகங்கள், ஆகியவற்றில் தயாராகும் உணவு பண்டங்களில் சுவையூட்ட நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. இதனடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தல் படி கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், ஏர்வாடி தர்ஹா பகுதியில் உள்ள உணவகங்களில் இன்று ஆய்வு செய்தார். அங்குள்ள 12 கடைகளில் நிறமி பயன்படுத்திய உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். கடை உரிமையாளர் 4 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். இரு வருக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தார்.