திண்டுக்கல், மே:03
திண்டுக்கல் எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி எல்ஐசியின் முதன்மை காப்பீட்டு ஆலோசகர்களால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் மதுரை கோட்ட சிஎல்ஐஏ மேனேஜர்கள் வைரமுத்து மற்றும் முத்துமாணிக்கம், திண்டுக்கல் கிளை-1 மேனேஜர் எஸ்.வழிவிட்டான். திண்டுக்கல் கிளை-2 மேனேஜர் சரவணன், பி & ஏசி உதவி மேனேஜர் எம்.செந்தில்குமார், திண்டுக்கல் கிளை-1 உதவி மேனேஜர் முத்துக்குமார், திண்டுக்கல் கிளை -2 உதவி கிளை மேலாளர் நரேஷ், திண்டுக்கல் எல்ஐசி சிஎல்ஐஏ உதவி நிர்வாக அதிகாரி ஹிமா சித்தார்த்தன், அலுவலக உதவியாளர் சண்முகம் மற்றும் முதன்மை காப்பீட்டு ஆலோசகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பணி நிறைவு பெறும் எல்ஐசி சிஎல்ஐஏ மேனேஜர் பழனிவேலுக்கு அதிகாரிகள் மற்றும் முதன்மை காப்பீட்டு ஆலோசர்களால் கிரீடம் சூட்டி, பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.

Leave a comment