தேனி மாவட்டம், மே – 4
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களிடையே வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தண்ணீர் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பேரூராட்சி மன்றத் தலைவர் செயலாளர் அனைத்து வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.