இஸ்ரோவின் கெகன்யா திட்டம் மூலம் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் செயல்முறை பயிற்சி நாகர்கோவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
நாகர்கோவில் மே 4
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்:- இஸ்ரோ வின்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன் (Space Station) அமைக்கும் பணிகளும் நடந்து வருவதாகவும், வரும் 2040-ல் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்த அவர் விண்ணிற்கு மனிதனை அனுப்பி திருப்பி பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் கெகன்யா என்ற திட்டம் இஸ்ரோ சார்பில் செயல்முறை விளக்கம் மற்றும் அதில் பயணிக்கும் மனிதர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு திட்ட சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும், அதில் பயணம் செய்யும் மனிதர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், நாசாவும் இஸ்ரோவும் சேர்ந்து NISAR என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதே போன்று வரும் 2035 க்குள் விண்வெளியில் இஸ்ரோ சார்பில் ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான திட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அதேபோன்று வரும் 2040-ல் இஸ்ரோ சார்பில் இந்திய மனிதன் ஒருவரை நிலவில் இறக்கவும் இஸ்ரோவிடம் திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.