நாகர்கோவில் – மே – 16
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகா, மருங்கூர் அடுத்த அமராவதிவிளை பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து மகன் ஆன்றனி வினோ (33) கட்டுமான தொழில் செய்து வருகிறார். இதுவரை திருமாணமாகாமல் தாய்தந்தையருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் பட்டகசாலியன் விளை பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி (23) என்பவருக்கும் இன்ஸ்ட்டாகிராம் மூலம் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் சிவரஞ்சனி கைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் சந்திப்பதற்கு நாகர்கோவில் வேப்பமுடு அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்கு வர சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் பூங்காவில் முதன் முதலாக சந்தித்துள்ளார்கள். அதன்பின்னர் ஒரு வாரம் கழித்து சிவரஞ்சனி ஆன்றனி வினோவை கன்னியாகுமரிக்கு வரவழைத்து சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது அப்போது தனக்கு திருமணமாகவில்லை என்றும் பெற்றோர்கள் இல்லையென்றும் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே என்னை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் வீட்டிலிருந்து ஓடி வருவதாகவும் கூறியுள்ளார். திருமண ஆசையை தூண்டிவிட்டு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். சிவரஞ்சனியின் பாட்டியின் உடல்நிலை சரியல்லாமல் இருக்கும்போது கடன்பெற்றிருப்பதும் அந்த கடன்களை தீர்த்தால் உன்னுடன் வந்து திருமணவாழ்க்கையில் ஈடுபடுவாதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை அவரும் ஏற்றுக் கொண்டதால் ஒரு மாத காலமாக ஆன்றனி வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் . இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தனது பாட்டி வீட்டிற்க்கு சென்றவர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் தனது நகைகளை பெற்றுக் கொண்டு ஆன்றணி வினோ திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் சமரசம் பேசி அவரவர் வீட்டிற்க்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 8 மாதங்களாக இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வினோவுக்கு திருமண ஏற்ப்பாடு நடைபெறுவதை அறிந்து சிவரஞ்சனி இரண்டு நாட்க்களுக்கு முன்பு ஆன்றணி வினோவின் தங்கைக்கு சிவரஞ்சனி ஆன்றனியுடன் இருந்த புகைப் படங்களை அனுப்பி , மீண்டும் பிரச்சினையை கிளப்பி உள்ளார் .
இது சம்மந்தமாக நேற்று நாகர்கோவிலில் கலைநகர் பகுதியில் தனியார் அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்த சிவரஞ்சனியை நேரில் சந்தித்து எதற்க்காக புகைப்படங்களை அனுப்பி கேவலப்படுத்துகிறாய் என கேட்டுள்ளார். எனவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆன்றனி வினோ தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவரஞ்சனியின் முகத்தில் குத்தி உள்ளார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிவரஞ்சனியை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் வினோவை துரத்தியதால் உயிருக்கு பயந்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பொதுமக்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்ஸ்ட்டாகிராம் பழக்கத்தால் கள்ள காதலியை கத்தியை எடுத்து குத்தி கொலை செய்ய முயன்று தானும் தற்கொலைக்கு முயற்ச்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.