திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 14-வது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு நடுமாடு சின்னமாடு என 3-பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது போட்டியானது ஜி.தும்மலப்பட்டியில் துவங்கி கணவாய்ப்பட்டி வழியாக வத்தலக்குண்டு பைப்பாஸ் சாலை வரை சுமார் 10-கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்பியது இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஜோடிக்கு வெள்ளி தார்க்குச்சி மற்றும் 30-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது தொடர்ந்து 2,3,4 இடங்களை பிடித்த மாடுகளுக்கு முறையே 20-ஆயிரம் முதல் 10-ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் மற்றும் தார்கம்பு கேடயம் பீரோ சேர் சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் திண்டுக்கல் மதுரை தேனி கம்பம் பழனி சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தது இந்த நிகழ்ச்சியை கோவில் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் ரேக்ளா குழுவினர் பெங்களூர் நண்பர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics