அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா சென்னை திருவல்லிக்கேணி கொண்டாடப்பட்டது .
இவ்விழாவில் ஆகஸ்ட் 24ஆம் தேதி ராஜாவிற்கு 201 தாய்மார்கள் பங்கு பெறும் பந்தக்கால் விழா நடைபெற்றது .அன்று முதல் பல வகையான பூஜைகள் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன .
செப்டம்பர் 13 ஆம் தேதியன்று அருள்மிகு திருவேட்டீஸ்வரர் ஆலய குருக்கள் விஜயகுமார் சுமங்கலி பூஜை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வார் திருக்கல்யாணம் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார் .
இதில் விஷ்ணு சகோதர முறைப்படியும், மாமன் முறை படியும் மீனாட்சி மற்றும் சுந்தரனார் இருவருக்கும் வஸ்திரங்கள் அளிக்கும் வகையில் போர்த்தப்பட்டது. யாகம் வளர்த்து, மந்திரங்கள் ஓதபட்டு முறை படி திருமண வைபவம் நடைபெற்றது.
திருமண முடிந்த பின் அம்மி மிதித்து, அருந்ததிசை பார்த்து வணங்கியும், விளையாட்டு சடங்குகளில் பூ பந்து , தேங்காய் உருட்டுதல் விளையாட்டுகள் நடைபெற்றன. முடிவாக அனைவருக்கும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலிருந்து பிரசாதங்கள் வரவழைக்கப்பட்டு தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.