அரியலூர்,மே:02
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநிலச் செயலாளருமான த.தண்டபாணி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பினை வழங்கினார். தொடர்ந்து, நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் முன்பு ஏஐடியுசி கொடியினை ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரெ.நல்லுசாமி மற்றும் சுகாதார தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்