அரியலூர், மே 14:
அரியலூரில் திமுக சார்பில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு திமுக பொறியாளர் அணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்,மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி பழம் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி, அருண் சிவம், செந்தமிழ்செல்வன், பாலபிரவின் ராஜ், விக்னேஷ் ஆகியோர் னிலை வகித்தார். இதே போல் அரியலூர் அண்ணாசிலை, போக்குவரத்து பணிமனை முன்பு ஆகிய இடங்களிலும் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து, பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலர் முருகேசன், நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.