ராமநாதபுரம், மார்ச் 16-
கோவை அம்ருதா பல்கலைக்கழகம், அதன் AMMACHI ஆய்வகங்கள் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவ மையத்தின் (CWEGE) மூலம், “ப்ளூ இஸ் தி நியூ பிங்க்” முயற்சியினை கடலோரம் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்முயற்சியானது, கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களில் பெண்களை பங்களிக்கச் செய்து, காலநிலை மீள்தன்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இம்முயற்சியின் முக்கிய பகுதியாக, அம்ருதா பல்கலைக்கழகம் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பை, ஓலைக்குடா, திருப்பாலைக்குடி, தொண்டி மற்றும் சோழியக்குடி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 115 பெண்களுக்கு அத்தியாவசிய கடற்பாசி சாகுபடிக்கான உபகரணங்களை விநியோகித்தது. 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடற்பாசி வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சார் நிறுவனங்களை நிறுவுவதற்குத் தேவையான திறன்கள், கருவிகள் மற்றும் சந்தை அணுகலை பெண்களுக்கு வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடற்பாசி சாகுபடியில் ஏற்கனவே 64-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றுள்ள நிலையில், இந்த முயற்சியானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இந்த மாதம், பல பெண்கள் 1,500 கிலோவிற்கும் மேலான கடற்பாசியை வெற்றிகரமாக சாகுபடிசெய்துள்ளது. கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு ஒரு மதிப்புமிக்க மானியமும் கிடைத்துள்ளது,
மார்ச் 8, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விநியோக நிகழ்வுகளில், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த லைஃப் ஜாக்கெட்டுகள், நீருக்கடியில் கண்ணாடிகள், மீன் வலைகள், கயிறுகள், கத்திகள் மற்றும் பிற அத்தியாவசிய கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வுகளை CWEGE-இன் இணை இயக்குநர் ஸ்ரீவித்யா சேஷாத்ரி தொடங்கி வைத்து சிறப்பித்தார், இந்நிகழ்வில் மீன்வளத் துணை இயக்குநர் (DDF) பிரபாவதி சிறப்புரை ஆற்றினார், மேலும் அம்ருதவித்யாலயம் மேலாளர் பிரம்மச்சாரிணி. லட்சுமி, கள ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், AMMACHI ஆய்வகங்களைச் சேர்ந்த பிரம்மச்சாரிணி. அம்ருதா, பானு மற்றும் அஸ்வதி ஆகியோர் இந்த முயற்சியை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
2024-ஆம் ஆண்டு ஏப்ரலில், 1,290 கிலோ கடற்பாசி சாகுபடியினை செய்து சாதனை படைத்த இந்த முயற்சியானது, பெண்கள் முன்னேற்றம், கடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கான அம்ருதா பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. கடற்பாசி சார்ந்த தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருவதால், “ப்ளூ இஸ் தி நியூ பிங்க்” முயற்சியானது பெண்களின் பொருளாதாரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், பசுமையான எதிர்காலத்திற்கான நிலையான கடல் சார்ந்த விவசாய நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது.