சென்னை புறநகர் மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி. மணிமாறன் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு மற்றும் வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி மற்றும் முன்னாள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அதிமுகவின் புகழை பேசி எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினர் .
இந்த நிகழ்ச்சியில் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.