திண்டுக்கல் மே :10
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் கைலாஷ் சத்யார்த்தி சில்ட்ரன் பவுண்டேஷன் இணைந்து குழந்தைகள் நல பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் இல்லா இந்தியாவை உருவாக்கும் பொருட்டு அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூப பாலன் தலைமையில் திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன், சமூக நலத்துறை, தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன். பஞ்சாயத்து அலுவலகம், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், தியான மண்டபங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் அரசு அதிகாரிகளின் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்டதின் மூலம் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 1098 , 112 ஆகிய உதவி எண்களின் பயன்பாடுகள் குறித்தும் மக்களுக்கு எடுத்து கூறப்பட்டது.