நாகர்கோவில், மே 11,
நாகர்கோவிலில் அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அக்ஷய திதியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் நகை கடைகளில் ஆர்வமுடன் நகைகளை வாங்கி சென்றனர்.
அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான தங்க வைர ஆபர நகைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர் அது போன்று புதியதாக தொழில் துவங்குபவர்கள் கட்டிட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபட்டனர்.