திண்டுக்கல் மே 17
செட்டியப்பட்டி கிராமத்தில் திராட்சையில் மதிப்புக்கூட்டுதல் பற்றி செயல் விளக்க கூட்டம் .மதுரை வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இதன் ஒரு அங்கமாக திராட்சையில் மதிப்புக்கூட்டுதல் பற்றி அ. அரவிந்த் குமார் செயல் விளக்க கூட்டம் நடத்தினார்.
மேலும் ஒட்டு பொறியை பயன்படுத்தி காய்கறிகளில் ஏற்படும் பூச்சிகளின் தாக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனவும் பயிர் பாதுகாப்பில் உயிரியல் முறைகட்டுப்பாடு பற்றியும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.