நாகர்கோவில் மே 13
முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி-யின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் மும்மத பிரார்த்தனை மற்றும் அறம் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
எடப்பாடி கே.பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகமெங்கும் சிறப்புற கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆரல்வாய்மொழி – செண்பகராமன்புதூர் சாலையில் உள்ள அறம் முதியோர் இல்லத்தில் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழா தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இம்முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டியினை தளவாய்சுந்தரம் வழங்கினார். முதியோர்கள் அனைவரும் எடப்பாடியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மும்மத பிரார்த்தனைகள் நடைபெற்றது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் திருக்கோவிலில் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் இதற்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் இடலாக்குடி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. பிற்பகல் பொற்றையடி அருகே மனோலையா காப்பகத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி, தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சுந்தர்நாத், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம், நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பூங்கா கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஆரல்வாய்மொழி பேரூர் கழகச் செயலாளர் சுடலையாண்டி, கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் டேனியல் தேவசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.