திருப்பத்தூர்:மே:03,
திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி கிராமம் முதல் கோனேரிகுப்பம் வரை புதியதாக தார் சாலை போடப்பட்டது. சாலை முடிந்த இரண்டே நாட்களில் கையில் பேர்த்தெடுத்தனர்.
திருப்பத்தூர் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி சொந்த ஊரில் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தார் சாலை பணி துவங்கப்பட்டது. மாடப்பள்ளி கிராமம் தொடங்கி கோனேரிகுப்பம் வரை புதிய சாலையினை போட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சாலையினை ராச்சமங்கலம் கிராமத்தினை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரமேஷ் சாலை போட்டு முடிந்ததாக தெரிய வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள், வாகனங்கள் பல சென்று வருகிறது இந்த நிலையில் அந்த வழியே சென்ற சில சமூக ஆர்வலர்கள் தார் சாலையினை கையிலே பெயர்த்து எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தரமான சாலையினை போடவில்லை என்பதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முழு தொகையினை ஒப்பந்ததாரர் செலவழித்தாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தரமற்ற தார் சாலை ஒப்பந்தம் எடுத்தவர்கள் மீது சம்மந்தப்பட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.