தஞ்சாவூர், மே.12-
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி!மாநில அளவில் 15 ஆவது இடம்!!
கடந்த ஆண்டை விட 2.01 சதவீதம் அதிகம்!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ். எஸ் எல்.சி. பொதுத் தேர்வில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாவட்டத்தில் உள்ளபள்ளிகளை சேர்ந்த 28,915 மாணவ மாணவி யர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 6 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.40 சதவீதம் மாணவர்கள் 90.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.29 சதவீத பேரும் என மொத்தம் 93.40 சதவீத பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டை விடதேர்ச்சி நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 2.01 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம்போல் நிகழாண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். எஸ்.எஸ் எல்.சி பொது தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவில் 17 ஆம் இடத்தை பிடித்திருந்த நிலையில் நிகழாண்டு 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.