சென்னை ஓஎம்ஆர் சாலையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழகத்தில் வெயிலில் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அதிமுக சார்பில் OMR சாலையில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த விழா அதிமுக கிழக்கு பகுதி செயலாளர் எம்.கே.பழனிவேல் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தபின்னர் அன்னாச்சி பழம் இளநீர் மோர் ரோஸ் மில்க் தர்பூசணி வெள்ளரிக்காய்நுங்கு செவ்வாழை சாத்துக்குடி கமலா கிர்னி வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்ட குளிர்ச்சி தரக்கூடிய 10 க்கும் மேற்பட்ட பழ வகைகளும் பலவிதமான குளிர்பானங்களையும் மக்களுக்கு வழங்கினர்.