கிருஷ்ணகிரி மே 8:
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே குளிர்விப்பு வசதி, ஆர்.ஓ., இயந்திரத்துடன், தி.மு.க.,வினர் தண்ணீர் பந்தல் திறந்தனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, மூன்றாண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டு நேற்று துவங்கியது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகர தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், குளிர்விப்பு வசதி ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகரசெயலாளர் நவாப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு முடிந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, குளிர்விக்கப்பட்ட நீர், வெந்நீர் உள்ளிட்டவைகள் வரும் வகையில் ஆர்.ஓ., இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் குளிர்விக்கப்பட்ட நீர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு வெந்நீர், கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் தர்பூசணி வெள்ளரிக்காய் நீர்மோர் இளநீர் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேச்சாளர் கண்ணன் சுப்பிரமணி, நகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில்ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல்

Leave a comment