சிவகங்கை:08
அமைச்சர் பெரியகருப்பன் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் பேரூர் செயலர் பிஏ.நஜுமுதீன் பங்கேற்பு. இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் பேரூராட்சி தலைவர் பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழவகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் டிகே.இப்றாகிம் மாவட்ட விவசாய அணி பா.காளிமுத்து கூட்டுறவுசங்கத்தலைவர் சுப.தமிழரசன் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாச்சட்டி சேகர் மாவட்ட சிறுபான்மையினரணி தலைவர் எம்ஏஎஸ் இ நாசர் மாவட்ட திமுக பிரதிநிதிகள் சையது கான் யாசின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மகாதீர் ஐடி விங் கண்ணன் பேரூர் கழக நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன் பைரோஸ்கான் மணிமொழியன் ஆரீப் ஒன்றிய நிர்வாகிகள் சிவனேசன் இராஜேந்திரன் வே.கருணாகரன் தௌலத் அஜீஸ் முன்னாள் பேரூர் செயலர்கள் ரகூப் செய்யது உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரூர்க்கழக செயலாளர் நஜீமுதீன் சிறப்பாக செய்திருந்தார்.